ஜப்பான் பிரதமர் மூன்று நாள்அமெரிக்கா சுற்று பயணம் மேற்கொண்டு அதிபரை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜப்பான் பிரதமர் சுகா வரும் ஏப்ரல் மாதம் மூன்று நாள் பயணமாக அமெரிக்கா செல்வதாக அந்நாட்டின் தலைமைச் செயலாளர் கூறியுள்ளார். அவர் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை ஏப்ரல் 9ஆம் தேதி வெள்ளை மாளிகையில் சந்திக்க போவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. மேலும் இவர்கள் இருவரும் இரண்டு நாடுகளின் நட்பை மேம்படுத்தும் குறித்தும் இந்திய பெருங்கடல், பசிபிக் பெருங்கடல் போன்றவற்றை சுதந்திரமாக கடப்தற்கான வழிகள் குறித்தும் கலந்து ஆலோசிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் 2016இல் அமெரிக்க அதிபராக இருந்த டிரம்பை அப்போது ஜப்பானின் அதிபராக இருந்த ஷின்சோ அபே முதல் வெளிநாட்டு தலைவராக சந்தித்தார். அதே போன்று ஜோ பைடன் அமெரிக்க அதிபரான பிறகு வெள்ளை மாளிகையில் சந்திக்கும் முதல் வெளிநாட்டு தலைவர் என்னும் பெருமையை ஜப்பான் பிரதமர் சகா பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.