Categories
உலக செய்திகள்

அமெரிக்கா: வாகனங்களுக்கு இடையில் கட்டுக்கடங்காமல் ஓடிய மாடு…. பின் மீட்புக்குழுவினர் செய்த செயல்…..!!!!

அமெரிக்க நாட்டின் ஓக்லஹாமா நகரத்தில் தொழுவத்திலிருந்து தப்பித்த ஒரு மாடு நெடுஞ்சாலை வழியே ஓட்டம் பிடித்தது. இதில் ஓக்லஹாமா- பென்சில்வேனியா நெடுஞ்சாலையானது எப்போதும் போக்குவரத்து நெரிசலுடன் காணப்படும். அந்த சாலையின் வழியாக வாகனங்களுக்கு மத்தியில் கட்டுக் கடங்காமல் அந்த மாடு வேகமாக ஓடிக்கொண்டு இருந்தது.

இதுகுறித்து கிடைத்த தகவலின்படி குதிரையில் சென்ற மீட்புக் குழுவினர், மாட்டை தொடர்ந்து துரத்திச் சென்றனர். ஒரு கட்டத்தில் பென்சில்வேனியா அருகே அந்த மாடு பிடிப்பட்டது. அதன்பின் மீட்புக்குழுவினர் இது வழக்கத்தை விட சவாலான பணியாக இருந்ததாக தெரிவித்தனர்.

Categories

Tech |