அமெரிக்க அதிபரின் இளைய சகோதரர் ராபர்ட் டிரம்ப் உடல்நலக்குறைவால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பின் இளைய சகோதரர் ராபர்ட் டிரம்ப்(71) காலமானார். உடல்நலக்குறைவால் நியூயார்க் சிட்டியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சகோதரர் மரணம் பற்றி அமெரிக்க அதிபர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,” எனது அருமையான சகோதரர் ராபர்ட் சனிக்கிழமை இரவு காலமானார் என்பதை நான் மிகுந்த மன வருத்தத்துடன் பகிர்ந்து கொள்கின்றேன்.
அவர் என் சகோதரர் மட்டுமல்லாமல் எனது சிறந்த நண்பர். நான் பெரிதும் நேசிக்கிறேன். ஆனால் நாங்கள் மீண்டும் சந்திப்போம்” என்று கூறியுள்ளார். ராபர்ட் டிரம்ப் அதிபர் டொனால்டு டிரம்ப்பின் இளைய சகோதரர். அவர் வோல் ஸ்ட்ரீட்டில் கார்ப்பரேட் ஃபைனான்ஸில் பணிபுரிந்தார் பின்னர் குடும்பத் தொழிலில் சேர்ந்தார், டிரம்ப் அமைப்பில் ஒரு உயர் நிர்வாகியாக ரியல் எஸ்டேட் பங்குகளை நிர்வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.