அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் 14 வயது மகனுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் அவரின் மனைவி மெலானியா ஆகிய இருவருக்கும் கடந்த 1 ஆம் தேதி கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து அதிபர் டிரம்ப் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். தற்போது அவர் குணமடைந்து வெள்ளை மாளிகை திரும்பியுள்ளார். ஆனால் அவரின் மனைவி இன்னும் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடையாததால் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில் அமெரிக்க அதிபரின் மகன் பரோன் டிரம்ப்பிற்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் 14 வயதுடைய சிறுவன் பரோனுக்கு வைரஸ் பாதிப்பு எப்போது ஏற்பட்டது என்று தெரியவில்லை. ஆனால் அவருக்கு கொரோனா வைரஸ் பரவியதாகவும், தற்போது குணமடைந்து விட்டதாகவும் பரோன் தாயார் மெலனியா கூறியுள்ளார்.