அமெரிக்கா ஜனாதிபதிக்கு என்னென்ன அதிகாரம் உள்ளது, அவரால் எந்தெந்த உத்தரவுகளை பிறப்பிக்க முடியும் என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
நவீனமயமான இந்த ஜனநாயகத்தில் பலம் வாய்ந்த பல நாடுகளில் உள்ள தலைவர்களை விட அமெரிக்க அதிபருக்கு அதிக அதிகாரம் இருக்கிறது. அமெரிக்காவின் ஜனாதிபதி என்பவர் பிரான்ஸ் மற்றும் ரஷ்யா நாடுகளுக்கு சமமான சக்தி வாய்ந்தவர் ஆவார். ஆனாலும் அமெரிக்க ஜனாதிபதிக்கு என்று சில கட்டுப்பாடுகள் இருக்கின்றன. அவரால் எல்லா உத்தரவுகளையுமே சுயமாக பிறப்பிக்க முடியாது. குறிப்பிட்ட சில உத்தரவுகளை மட்டுமே அவரால் சுயமாக பிறப்பிக்க முடியும். அமெரிக்க ராணுவத்திற்கு பிற நாட்டுடனான போரை அனுமதிக்க நாடாளுமன்றத்தால் மட்டுமே முடிவெடுக்க முடியும்.
அமெரிக்க ஜனாதிபதியால் இந்த முடிவை எடுக்க முடியாது. ஆனால் அமெரிக்க மண்ணிற்கோ அல்லது அங்கு வாழும் மக்களுக்கோ ஏதேனும் அச்சுறுத்தல்கள் இருப்பது ஜனாதிபதிக்கு தெரியவந்தால் ராணுவத்தை அனுப்புவதற்கு அவர் உத்தரவு பிறப்பிக்கலாம். ஆனாலும் 90 நாட்களுக்குள் நாடாளுமன்றத்தின் அனுமதியை பெற்ற பிறகு மட்டுமே ஜனாதிபதியால் இந்த உத்தரவை பிறப்பிக்க முடியும். கலவரம் ஏற்படும் மாநிலத்தில் உள்ள அந்த அரசால் அச்சம்பவத்தை கட்டுப்படுத்த முடியவில்லை அல்லது கட்டுப்படுத்த விருப்பம் இல்லை என்று தெரிவித்தால் மட்டுமே ஜனாதிபதி ராணுவத்தை அனுப்ப தலையிட முடியும்.
அமெரிக்காவின் அதிபர் என்பவர் முப்படைகளின் தளபதியாக இருப்பதால் அணு ஆயுத தாக்குதல் தொடர்பான உத்தரவுகளை அவரால் மட்டுமே பிறப்பிக்க முடியும். அதுமட்டுமின்றி அவருக்கு கொடுக்கப்பட்டிருக்கும் ரகசிய குறியீடு இருந்தால் மட்டுமே அணு ஆயுதங்களை இராணுவங்களால் பயன்படுத்த முடியும். இருப்பினும் எதாவது ஒரு ஆபத்தான காலகட்டம் வரும் போது பாதுகாப்பு அமைச்சர் இந்த உத்தரவை பிறப்பிக்கலாம். மேலும் அமெரிக்க அதிபரால் நாடாளுமன்ற கூட்டத்தை கலைத்துவிட்டு தேர்தலுக்கு அழைப்பு விடுக்க மஅதிகாரம் கிடையாது.
மேலும் நீதிபதிகளை நியமிக்கும் பொறுப்பு ஜனாதிபதிக்கு கொடுக்கப்பட்டுள்ளதால் உச்சநீதிமன்ற நீதிபதிகள் மூவருக்கு வாழ்நாள் பொறுப்பு ஒன்று வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் நீதிபதிகளை நியமனம் செய்வதில் நாடாளுமன்றத்தின் ஒப்புதல் இருந்தால் மட்டுமே ஜனாதிபதியால் நீதிபதிகளை நியமிக்க முடியும். மேலும் அமெரிக்காவில் உள்ள சிறைக் கைதிகளுக்கு மன்னிப்பு வழங்கவும், தண்டனை காலத்தை குறைக்கவும் அமெரிக்க ஜனாதிபதிக்கு அதிகாரம் உள்ளது.