Categories
உலக செய்திகள்

அமெரிக்க அதிபர் ஜோபைடனின் மனைவிக்கு… மீண்டும் உறுதியானது கொரோனா பாதிப்பு….!!!!!!!

அமெரிக்காவின் முதல் பெண்மணி என அழைக்கப்படும் அமெரிக்க அதிபரின் மனைவி ஜில்பைடனுக்கு கொரோனா பாதிப்பு மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து அமெரிக்க அதிபர் ஜோபேடனுக்கு புதன்கிழமை கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை. இதனை அடுத்து ஜில்பைடன் டெலோவரில் உள்ள இல்லத்தில் தனிமைபடுத்திக் கொண்டிருப்பதாக வெள்ளை மாளிகை கூறியுள்ளது. அவருக்கு அறிகுறிகள் ஏதுமில்லை என கூறப்பட்டுள்ளது. இருந்த போதிலும் ஜில்பைடனை சந்தித்து இருந்ததால் அதிபர் ஜோபைடனுக்கும் அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான மையங்களின் வழிகாட்டுதல்களை பின்பற்றி பத்து நாட்களுக்கு வீட்டிற்குள் தனிமைப்படுத்திக் கொள்வார் என கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |