Categories
உலக செய்திகள்

அமெரிக்க அதிபர் ஜோ பைடன்… ரஷ்யாவுக்கு போக தடை…. வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட தகவல்….!!!!

உக்ரைன் மீது ரஷ்ய ராணுவம் நடத்தியுள்ள படையெடுப்பு 3 மாதங்களை கடந்துள்ளது. இந்த போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் வேண்டுகோள் விடுத்தது. எனினும் ரஷ்யா இதற்கு உடன்படவில்லை. இதற்கிடையில் உக்ரைனும் பதிலடி கொடுப்பதில் தீவிரம்காட்டி வருகிறது. இந்த நிலையில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா ராணுவ தளவாடங்கள், ஆயுதங்களை வழங்கி வருகிறது. அதுமட்டுமல்லாமல் கோடிக் கணக்கில் நிதி ஒதுக்கீடும் செய்து வருகிறது. இதை தவிர்த்து ரஷ்யாவுக்கு நெருக்கடி ஏற்படுத்தும் அடிப்படையில் அந்த நாட்டுக்கு எதிராக பல பொருளாதார தடைகளையும் விதித்து வருகிறது.

இப்போரால் கோதுமை, சோளம் ஆகிய உணவுபொருட்கள் மற்றும் பிற அத்தியாவசிய பொருட்களின் விலையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ரஷ்யாவும் சில நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதன்படி ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ரஷியா மீது தொடர்ந்து அமெரிக்க தடைகளை விதித்து வருகிறது. இந்த சூழ்நிலையில் அதற்கு பதில் நடவடிக்கையாக ரஷ்ய கூட்டமைப்புக்குள் நுழைவதற்கு நிரந்தர தடைவிதிக்கப்பட்ட அமெரிக்க குடிமகன்களின் பட்டியலை ரஷ்ய அரசு வெளியிடுகிறது என தெரிவித்துள்ளது.

ரஷ்ய நாடு மற்றும் ரஷ்யர்களுக்கு எதிராக வெறுப்பு கொண்டவர்கள் மற்றும் அவர்களுக்கு துணை போகிற தனிநபர்கள் இப்பட்டியலில் வருகின்றனர். இவற்றில் அமெரிக்க பொதுமக்கள் வருவதில்லை. ஆகவே அவர்கள் எப்போதும் எங்களால் மதிக்கப்படுகிறார்கள் எனவும் அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. அந்த வகையில் அமெரிக்க அதிபர் ஜோபைடன், அவரது உறவினர்கள் மற்றும் பிற அதிகாரிகள், மேலாளர்கள் உள்பட அமெரிக்க தனிநபர்கள் 963 பேர் ரஷ்யாவுக்குள் நுழைய தடைவிதிக்கப்பட்டுள்ளது என வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது.

Categories

Tech |