அமெரிக்க அதிபர்கள் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ள நிலையில் கடந்த நூற்றைம்பது ஆண்டுகளில் அமெரிக்க அதிபர்கள் மீது நடத்தப்பட்ட கொலை முயற்சிகள் பதவியில் இருக்கும் போதே கொல்லப்பட்ட அதிபர்கள் குறித்து பார்க்கலாம்.
கடந்த 150 ஆண்டுகளில் ஆப்ரஹாம் லிங்கன், ஜெம்ஸ் வில்லியம், மெக்கின்லி, ஜான் எப் கென்னடி ஆகிய நான்கு அமெரிக்க அதிபர்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். 15 அதிபர்களை கொல்ல நடத்தப்பட்ட முயற்சிகள் தோல்வியில் முடிவடைந்தன. 1865-இல் கருப்பின மக்களை அடிமையாக நடத்துவதை எதிர்த்து உறுதியான நிலைப்பாட்டை எடுத்த ஆப்ரஹாம் லிங்கன் ஒரு நாடக அரங்கில் ஜான் வில்கின்ஸ் பூத் என்ற வெள்ளை இன வெறியாரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அமெரிக்க உள்நாட்டுப் போரில் ஆப்ரஹாம் லிங்கன் தலைமையிலான வடக்கு மாநிலங்கள் வெற்றி பெற்ற பின் கறுப்பின அடிமை முறையை ஒலிக்க ஆப்ரஹாம் லிங்கன் வகை செய்தது அவரின் கொலைக்கு காரணம். 1881- இல் அதிபர் ஜேம்ஸ் கார்பீல்டை ஒரு மனநிலை பாதிக்கப்பட்ட நபர் சுட்டுக் கொன்றார். 1901-இல் வில்லியம் மெக்கின்லியை லியான் காஸ்க்லாஸ் என்பவர் சுட்டுக் கொன்றார்.
அமெரிக்க அதிபர்களின் மிக இளம் வயதானவரும் மிகப் புகழ் பெற்றவருமான ஜான் எப் கென்னடி 1963-இல் டெலஸ் நகரில் ஒரு திறந்த காரில் செல்லும்போது லீ ஹார்வி ஆஸ்வால்டு என்ற முன்னாள் ராணுவ வீரர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரின் கொலை உலக அரசியல் அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கொலையாளி ஆஸ்வால்டு கம்யூனிச சார்புடைவராக இருந்தவர். சோவியத் ரஷ்யாவிற்கு சென்று சில காலம் தங்கி இருந்து ஒரு ரஷ்ய பெண்ணை காதலித்து திருமணம் செய்திருந்தார். மீண்டும் அமெரிக்காவிற்கு குடும்பத்துடன் திரும்பியபின் கியூபா நாட்டின் கம்யூனிச அரசுக்கு ஆதரவாக அமெரிக்காவில் பிரச்சாரம் செய்தார். பிடல் காஸ்ட்ரோவிற்கு ஆதரவு திரட்டினார். இதன் காரணமாக கென்னடி கொலையில் சோவியத் ரஷ்யா கியூபா போன்ற கம்யூனிச நாடுகளின் பங்கு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. கென்னடி கொலை நடந்த அன்றே காவல் துறையினரிடம் பிடிபட்ட ஆஸ்வால்டு அடுத்த நாளன்று ஒரு சூதாட்ட விடுதி உரிமையாளர் சுட்டுக் கொன்றதால் ஆஸ்வால்டு பற்றிய மர்மம் இன்றும் நீடிக்கிறது.
ஆனால் அமெரிக்க அரசு நியமித்த வார்டன் கமிஷன் ஆஸ்வால்டு தன்னிச்சையாக தான் இந்த கொலையை செய்தார் என்றும் அவருக்குப் பின்புலமாக வேறு யாரும் இல்லை என்றும் அறிக்கை அளித்துள்ளது. ஆனால் இன்றுவரை இதை பற்றிய சர்ச்சைகள் தொடர்கின்றன. 1975-இல் அதிபர் ஜெரால்ட் போர்டை, சாரா ஜேன் மூர் என்ற இடதுசாரி சார்புடைய பெண் சுட்டுக் கொல்ல முயன்றார். ஆனால் குறி தவறியதால் அந்த முயற்சி தோல்வி அடைந்தது. 1981-இல் அதிபர் ரொனால்ட் ரீகனை ஜான் ஹன்க்லீ என்ற மனநிலை பாதிக்கப்பட்ட இளைஞர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்ல முயன்றார். நுரையீரலில் குண்டு பாய்ந்து ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ரீகன் அறுவை சிகிச்சை மூலம் குணம் அடைந்து பின்னர் எட்டு ஆண்டுகள் அமெரிக்க அதிபராக சிறப்பாக பணியாற்றினார். அமெரிக்க அதிபர்களை கொல்ல பலமுறை முயற்சிகள் நடந்ததால் அதிபர்களுக்கு மிகக் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளை சிறப்பு படையினர் செய்து வருகின்றனர்.