Categories
உலக செய்திகள்

அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரம் – 2-ம் கட்ட நேருக்கு நேர் விவாத நிகழ்ச்சி ரத்து

அமெரிக்க அதிபர் தேர்தலை ஒட்டி நடைபெறவிருந்த டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ஜோபிடன் இடையிலான இரண்டாம் கட்ட நேருக்கு நேர் விவாதம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

அதிபர் டொனால்டு மற்றும் ஜோபிடன் இடையிலான முதல் நேரடி விவாத நிகழ்ச்சி கடந்த மாதம் 29-ஆம் தேதி ஓஹியோ மாகாணத்தில் நடைபெற்றது. இந்த விவாத நிகழ்ச்சி நடைபெற்று சில நாட்களில் அதிபர் ட்ரம்பிற்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ட்ரம்ப் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வெள்ளை மாளிகையில் தனது பணிகளை தொடர்ந்து வருகிறார். இதற்கிடையில் புளோரிடாவில் வரும் 15 -ஆம் தேதி அன்று நடைபெற இருந்த இரண்டாவது நேரடி விவாத நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.

கொரோனா காரணமாக இந்த விவாதத்தை காணொளி மூலம் நடத்த அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான விவாத ஒருங்கிணைப்பு கமிஷன் முடிவு செய்ததை டிரம்ப்பும், பிடனும் ஒப்புக்கொள்ளவில்லை. காணொளி மூலம் விவாத நிகழ்ச்சியில் பங்கேற்று தனது நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை என்று அதிபர் டிரம்ப் தெரிவித்தார். ஜோபிடனும் காணொளி வாதத்திற்கு ஒப்புக்கொள்ளவில்லை என கூறப்படுகிறது. இதனையடுத்து டிரம்ப் மற்றும் ஜோபிடன் இடையே நடைபெற இருந்த இரண்டாம் கட்ட நேருக்கு நேர் விவாதம் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே திட்டமிட்டபடி வரும் 22-ம் தேதி மூன்றாம் கட்ட விவாதம் நேரடியாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |