அமெரிக்க அரசின் ரகசிய தகவல்களை கசிய விட்டதாக குற்றம் சாட்டப்பட்டு வரும் முன்னாள் உளவுத்துறை தகவல் தொழில்நுட்ப பணியாளரான எட்வர்டு ஸ்னோடனுக்கு ரஷ்ய அரசு குடியுரிமை வழங்கி இருக்கிறது. அமெரிக்காவின் டெல் நிறுவனத்திலும் சிஐஏ உழவு நிறுவனத்திலும் பணியாற்றி இருந்த எட்வர்ட் அந்த நாட்டின் தேசிய புலனாய்வு அமைப்பாளர் என் எஸ் ஏ வில் கடந்த 2013 ஆம் வருடம் ஒப்பந்த பணியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த சூழலில் அதே வருடம் மே மாதத்தில் ரகசிய ஆவணங்களுடன் அவர் ஹாங்காங் தப்பி சென்றுள்ளார். அதன் பின் ஆயிரக்கணக்கான ரகசிய ஆவணங்களை அவர் செய்தியாளர்களுக்கு அளித்துள்ளார். அந்த விவரங்களை தி கார்டியன் வாஷிங்டன் போஸ்ட் இதழில் இடம் பெற்றதை தொடர்ந்து எட்வர்டு பெயர் சர்வதேச அளவில் பிரபலமாக உள்ளது.
இந்த நிலையில் 1917 ஆம் ஆண்டின் உளவு குற்றச்சாட்டத்தின் கீழ் எட்வர்டுக்கு எதிராக அமெரிக்க நிதி துறை வழக்கு பதிவு செய்து அவரது கடவு சீட்டையும் முடக்கியுள்ளது. இதனை அடுத்து எட்வர்டு ரஷ்யாவிற்கு தப்பி சென்றுள்ளார். அங்கு அவரது பாஸ்போர்ட் ரத்து செய்யப்பட்டதை அறிந்து கொண்ட ரஷ்ய அதிகாரிகள் மாஸ்கோ விமான நிலையத்தில் ஒரு மாதத்திற்கு மேல் தங்கி இருக்க உத்தரவிட்டிருக்கின்றனர். அதன்பின் அவருக்கு ஒரு வருட கால அடைக்கல உரிமை அளிக்கப்பட்டு அது மீண்டும் புதுப்பிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் 2020 ஆம் வருடம் ரஷ்யாவில் நிரந்தரமாக தங்கி இருப்பதற்கான உரிமையை எட்வர்டு பெற்றுள்ளார். ரஷ்யாவில் தங்கி இருக்கும் 75 வெளிநாட்டினருக்கு அந்த நாட்டின் குடியுரிமையை அளிப்பதற்காக அதிபர் புடின் பிறப்பித்த உத்தரவு திங்கள்கிழமை வெளியிடப்பட்டுள்ளது.
இதில் எட்வர்டு பெயரும் இடம் பெற்று இருக்கிறது. மேலும் ரகசிய ஆவணங்களை கசிய விட்டதன் மூலமாக அமெரிக்காவிற்கு தேச துரோகம் செய்ததாக ஒரு தரப்பினர் அவர் மீது குற்றம் சாட்டி வந்தாலும் தேசிய பாதுகாப்பிற்கும் பொது மக்களின் ரஷ்ய காப்புரிமையை பறிக்கும் விதமாக அவர்களை வேவு பார்ப்பதற்கும் இடையே சமநிலையை பாதுகாக்க வேண்டியது அவசியம் பற்றியும் அவரது செயல்கள் உணர்த்திருப்பதாகவும் கூறப்படுகின்றது.