மக்களவை உறுப்பினர் சசி தரூர் பொய்களை பரப்புவதாக கூறி ட்ரம்பின் பேட்டியை அமெரிக்க ஊடகங்கள் நிறுத்திய செயல் இந்திய ஊடகங்களுக்கான பாடம் என தெரிவித்துள்ளார்.
நவம்பர் 3ஆம் தேதி நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் வெற்றிபெற 270 இடங்களை ஒருவர் கைப்பற்ற வேண்டும். இதுவரை வந்த முடிவுகளின் படி ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ.பிடன் 264 சபை வாக்குகளை பெற்றுள்ளார் . அவர் வெற்றி பெறுவதற்கு இன்னும் 6 இடங்கள் தேவை. குடியரசு கட்சி வேட்பாளர் ட்ரம்ப் 214 சபை வாக்குகளை பெற்று பின்னடைவில் இருக்கிறார். இந்நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய ட்ரம்ப் ‘ஜனநாயக கட்சியினர் எங்களிடமிருந்து வாக்குகளை சட்டவிரோதமாக திருட முயற்சி செய்கின்றனர்’ என கூறியுள்ளார்.
ஆனால் செய்தி நிறுவனங்கள் தவறான செய்திகளை கூறுவதாகவும் ,பொய்களை பரப்புவதாகவும் கூறி இந்த சந்திப்பின் ஒளிபரப்பை நிறுத்திவிட்டனர். இதுகுறித்து திருவனந்தபுரம் மக்களவை உறுப்பினர் சசி தரூர் அமெரிக்க ஊடகங்களின் இந்த செயல் இந்திய ஊடகங்ளுக்கான பாடம் என்று ட்வீட் செய்துள்ளார். மேலும் இங்கு ஒருமைப்பாடு நிரந்தமானதே தவிர தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்கள் இல்லை. பத்திரிக்கை சுதந்திரம் என்பது எப்போது மதிக்கப்படுகிறது என்றால், அதை நாம் சரியாக பயன்படுத்தும் போது மட்டுமே என குறிப்பிட்டுள்ளார். இதற்க்கு நடிகர் பிரகாஷ்ராஜ் ‘மக்களாகிய நாம் ஏன் டீவியை அணைக்கக் கூடாது ‘ என்று ரீ- ட்வீட் செய்துள்ளார் .