Categories
உலக செய்திகள்

அமெரிக்க, ஐரோப்பிய மக்களுக்கு அனுமதி.. ஆனால் பிரிட்டன் மக்களுக்கு..? பிரான்ஸ் அதிபர் எடுத்துள்ள முடிவு..!!

பிரான்ஸ் அதிபர், கோடைகாலத்திலாவது தடுப்பூசி செலுத்திக்கொண்ட மக்களை நாட்டிற்குள் அனுமதிப்பது குறித்து முடிவெடுத்து வருவதாக தெரிவித்துள்ளார். 

பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோன், இந்த கோடைகால சமயத்தில் தடுப்பூசி செலுத்தி கொண்ட அமெரிக்க மக்கள் மற்றும் ஐரோப்பிய மக்களையும் நாட்டினுள் அனுமதிப்பது குறித்து முடிவு எடுத்து வருவதாக தெரிவித்திருக்கிறார். அதாவது தடுப்பூசி செலுத்தி கொண்ட மக்கள் அல்லது தங்களுக்கு கொரோனா தொற்று இல்லை என்பதை நிரூபிக்கும் ஆதாரம் உள்ள சுற்றுலா பயணிகள் மட்டுமாவது இந்த கோடை கால சமயத்தில் பாரிஸை பார்க்க அனுமதிக்க ஆசைப்படுவதாக அவர் தெரிவித்திருக்கிறார்.

மேலும் ஐரோப்பிய நாடுகளுக்குள்ளாக பயணம் செய்துகொள்ளும் படி ஒரு சான்றிதழை தயாரிக்கும்  பணியில் அரசு ஈடுபட்டிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். ஆனால் அதில் பிரிட்டன் இருக்கிறதா? என்பதை அவர் தெரிவிக்கவில்லை. மேலும் பிரான்ஸ் அரசு, அர்ஜெண்டினா, சிலி, தென்னாபிரிக்கா மற்றும் பிரேசில் போன்ற நான்கு நாடுகளில் இருந்து வரும் மக்களுக்கு கடும் விதிமுறைகளை விதிப்பதற்கு, முடிவெடுத்துள்ளது. மேலும் இந்த 4 நாடுகள் கொண்ட பட்டியல் மேலும் நீட்டிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

Categories

Tech |