Categories
விளையாட்டு

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியிலிருந்து விலகிய ஏஞ்சலிக் கெர்பர்…. எதற்காக தெரியுமா?….!!!!

முன்னாள் நம்பர்ஒன் டென்னிஸ் வீராங்கனை மற்றும் 3 கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்றவருமான ஜெர்மனி நாட்டை சேர்ந்த ஏஞ்சலிக் கெர்பர்(34) தான் கர்ப்பமாக இருக்கும் செய்தியை ரசிகர்களுக்கு சமூகவலைதளத்தின் வாயிலாக பகிர்ந்திருக்கிறார். மேலும் அவர் கர்ப்பமாக இருப்பதால் வரும் 29ஆம் தேதியன்று நியூயார்க்கில் துவங்கும் அமெரிக்க ஓபன்டென்னிஸ் போட்டியிலிருந்து விலகி இருக்கிறார். இது தொடர்பாக ஏஞ்சலிக் கெர்பர் தன் ட்விட்டரில் “அமெரிக்க ஓபன்டென்னிஸ் போட்டியில் விளையாட வேண்டும் என உண்மையிலேயே விருப்பபட்டேன்.

எனினும் இறுதியாக கர்ப்பமாக இருப்பதை சுட்டிக்காட்டி இருவருக்கு எதிராக ஆடுவது நியாயமான போட்டியாக இருக்காது என்பதால் விலக முடிவு எடுத்தேன். அடுத்த மாதத்திலிருந்து ஒரு டென்னிஸ் வீராங்கனையாக உலகம் முழுதும் சுற்றுப் பயணம் செய்வதிலிருந்து ஓய்வு எடுக்க இருக்கிறேன். ஆனால் இது மிகச் சிறந்த காரணத்துக்காக என நம்புகிறேன். நான் உங்கள் அனைவரையும் தவறவிடுகிறேன். நியூயார்க் என் டென்னிஸ் வாழ்க்கையில் அடிக்கடி ஒரு திருப்புமுனையாக இருந்து இருக்கிறது.

இதன் காரணமாக இந்த ஆண்டும் வித்தியாசமாக இருக்காது என உணர்கிறேன். இங்கு கடந்த 2016-ம் வருடம் அமெரிக்க ஓபன் பட்டத்தை வென்றதுடன் உலகின் நம்பர் ஒன் இடத்தையும் பிடித்தேன். இதனால் நியூயார்க்குக்கு என் மனதில் எப்போதும் சிறப்புவாய்ந்த இடம் உண்டு. புது அத்தியாயத்தை நோக்கி பயணிக்கிறேன். அதே சமயத்தில் உற்சாகமாகவும், பரவசமாகவும் இருக்கிறேன். அத்துடன் நீங்கள் கொடுக்கும் ஆதரவுக்கு நன்றி” என அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |