அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த போட்டியின் 3-வது சுற்று ஆட்டத்தில் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த உலகின் 2-ம் நிலை வீரரானா ரபேல் நடால் பிரான்ஸ் வீரர் ரிச்சர்ட் கேஸ்குயிட்டுடன் மோதினார். இதில் ரபேல் நடால் 6-0, 6-1, 7-5 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். இதனால் கேஸ்குயிட்டுடனான 18 ஆட்டத்திலும் ரபேல் நடால் வெற்றி பெற்றுள்ளார். இதேபோன்று ஸ்பெயின் வீரர் கார் லோஸ் அல்காரஸ் அமெரிக்க வீரர் ஜென்சனை 6-3, 6-3, 6-3 என்ற செட் கணக்கில் வீழ்த்தி 4-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
அதன் பிறகு ரஷ்ய வீரர் ரூபலேவ், இங்கிலாந்து வீரர் கேமரூன் நோரி ஆகியோரும் 3-வது சுற்றில் வெற்றி பெற்று 4-வது சுற்றுக்கு முன்னேறி உள்ளனர். மேலும் பெண்கள் ஒற்றையர் பிரிவில் போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக் 6-3, 6-4 என்று செட் கணக்கில் அமெரிக்க வீராங்கனை லாரன்ஸ் ஓவிசை வீழ்த்தினார். இதேபோல் அமெரிக்க வீராங்கனை ஜெசிகா பெகுலா 6-2, 6-7, 6-0 என்ற செட் கணக்கில் சீன வீராங்கனை யூவானை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.