அமெரிக்காவை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் மர்ம பொருட்களுடன் இஸ்ரேல் விமான நிலையத்திற்கு வந்ததால் மக்கள் பதறியடித்துக்கொண்டு ஓடியுள்ளனர்.
இஸ்ரேல் நாட்டிலிருக்கும் பென் சூரியன் விமான நிலையத்திலிருந்து தங்கள் சொந்த நாட்டிற்கு செல்வதற்காக அமெரிக்க குடும்பம் ஒன்று வந்துள்ளது. அப்போது விமான நிலையத்தில் சோதனையில் , அவர்கள் மர்ம பொருள் வைத்திருந்தது தெரியவந்தது. அந்த பொருட்களை பார்த்தவுடன் பொது மக்களும் அதிகாரிகளும் அதிர்ச்சியடைந்தார்கள்.
மேலும், விமான நிலையத்திலிருந்த சில மக்கள் பதறியடித்துக் கொண்டு ஓடி விட்டனர். அதன்பின்பு பாதுகாப்பு பணியாளர்கள் விசாரணை மேற்கொண்டதில் அந்த குடும்பத்தினர் கோலன் ஹெயிட்ஸ் என்ற இடத்திற்கு சென்ற சமயத்தில், வெடிக்காத ஷெல்லை நினைவிற்காக எடுத்து வந்துள்ளனர் என்று தெரிய வந்திருக்கிறது. அதன்பிறகு விசாரணை முடிந்தவுடன் அவர்களை விமானத்தில் ஏறுவதற்கு அனுமதித்தனர்.