அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்தில் இங்கிலாந்து இளவரசர் ஹரியின் மனைவி ஈடுபட உள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வருகின்ற நவம்பர் மாதத்தில் நடக்க உள்ளது. அதற்கான தேர்தல் பிரசாரங்கள் தற்போது தொடங்கப்பட்டுள்ள நிலையில், இங்கிலாந்து இளவரசர் ஹாரியின் மனைவியும் முன்னாள் அமெரிக்க நடிகையுமான மேகன் மெர்க்கல் தேர்தல் பரப்புரையில் ஈடுபட போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் நாட்டின் அனைத்துப் பெண்களும் தங்கள் வாக்குகளை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதற்கு ஆதரவாக முன்னாள் ஜனாதிபதி ஒபாமாவின் மனைவி மிச்சைல் ஒபாமா தன்னார்வலராக பிரசாரங்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார். இந்நிலையில், வருகின்ற ஆகஸ்ட் 20-ஆம் தேதி நடக்க உள்ள பிரசாரத்தில் மோகன் மெர்க்கல் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார். அவருடன் நான்கு பிரபலமான பெண்கள் இணையவழி பரப்புரையில் கலந்து கொள்கின்றனர். இங்கிலாந்தில் இந்த நிகழ்ச்சி இரவு 10 மணிக்கு நேரடி ஒளிபரப்பாக உள்ளது. இங்கிலாந்து அரசு குடும்ப உறுப்பினர்கள் பொதுவாக தேர்தலில் வாக்களிப்பது கிடையாது. ஆனால் இங்கிலாந்து இளவரசரின் மனைவி தற்போது வாக்களிக்க உள்ளதாக கூறியுள்ளார்.
அது மட்டுமன்றி பொதுமக்கள் அனைவரும் தங்கள் வாக்குகளை பதிவு செய்ய வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார். கடந்த 2014ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில், அப்போது இருந்த ஜனாதிபதி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்பை, மோகன் மெர்க்கல் கடுமையாக விமர்சித்துள்ளார். அச்சமயத்தில் இதுகுறித்து டிரம்ப்யிடம் கேட்டபோது, மோகன் மெர்க்கலை தமக்குத் தெரியாது எனவும், அவர் இவ்வளவு இழிவானவர் என்பது தனக்கு தெரியாது எனவும் கூறியிருந்தார்.