கொரோனாவால் வீழ்ச்சியை சந்தித்த பொருளாதாரத்தை மீட்டெடுக்க பல நாடுகள் முயற்சி செய்து வருகின்ற நிலையில் உக்ரைன் ரஷ்யா இடையேயான போர் உலகப் பொருளாதாரத்தை மேலும் பின்னோக்கி தள்ளுகின்றது. மேலும் போரால் கச்சா எண்ணெய் உணவு தானியங்களில் விலை அதிகரிக்க தொடங்கி இருக்கின்றது. இதன் காரணமாக அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் பொருட்களின் விலை ஏற்றமடைந்து பணவீக்கம் உயர்ந்துள்ளது. இந்த நிலையில் பண வீக்கத்தை கட்டுப்படுத்த அமெரிக்க மத்திய வங்கி உட்பட பல நாடுகளின் வங்கிகள் வட்டி விகிதத்தை அதிகரித்துள்ளது. மேலும் வட்டி விகித அதிகரிப்பு அந்நிய செலவாணி சந்தையில் அமெரிக்க டாலரின் தேவையை அதிகரித்து அதன் மதிப்பை அதிகரித்து இருக்கிறது.
அதே சமயம் முதலீடுகளை பல நாடுகளும் டாலருக்கு மாற்றி வருவதால் டாலரின் மதிப்பு அதிகரித்து வருகின்றது. மேலும் இந்திய பங்கு சந்தையில் இருந்து அந்நிய முதலீடுகளின் வெளியேற்றம் போன்ற காரணங்களால் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து கொண்டே வருகிறது. இந்த சூழலில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பும் வரலாற்றில் இதுவரை இல்லாத விதமாக சரிவை கண்டுள்ளது. அமெரிக்க டாலருக்கு இந்திய ரூபாயின் மதிப்பு 83.02 ஆகவே வீழ்ச்சடைந்துள்ளது ரூபாயின் மதிப்பு மேலும் 66 காசுகள் சரிந்து 83.02 என்ற நிலையை எட்டி இருக்கிறது.