Categories
தேசிய செய்திகள்

“அமெரிக்க டாலருக்கு பதிலாக ரூபாயில் வர்த்தகம்”….. வங்கிகளுக்கு மத்திய அரசின் புதிய உத்தரவு….!!!!!

உக்ரைன் மற்றும் ரஷ்யாவுக்கு இடையே போர் தொடங்கியதிலிருந்து பல்வேறு நாடுகளில் பொருளாதார சரிவு மற்றும் சர்வதேச விநியோக சங்கிலியிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ரஷ்யா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் மீது பொருளாதார தடை விதித்துள்ளதால் அமெரிக்க டாலருக்கான தேவை அதிகரித்துள்ளது. இதனால் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய மதிப்பும் வரலாறு காணாத அளவுக்கு சரிவடைந்துள்ளது.

இதன் காரணமாக இந்தியா மற்ற நாடுகளுடன் அமெரிக்க டாலருக்கு பதிலாக ரூபாயிலேயே வர்த்தகம் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கு ரஷ்யா, மோரிசஸ் மற்றும் இலங்கை போன்ற நாடுகள் ஆதரவு கொடுத்துள்ளது. மேலும் பல நாடுகளுடன் அமெரிக்க டாலருக்கு பதிலாக ரூபாயிலேயே வர்த்தகம் செய்வதற்கான நடவடிக்கைகளை ஆராயுமாறு வர்த்தக அமைப்புகள் மற்றும் வங்கிகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

Categories

Tech |