Categories
உலக செய்திகள்

“அமெரிக்க தேர்தல்” இது நடந்தால் ட்ரம்பை நம்ப மாட்டேன்…. கமலா ஹாரிஸ் உறுதி…!!

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் கொரோனா தடுப்பு ஊசி வெளியிடப்படும் என்ற ட்ரம்பின் அறிவிப்பை கமலா ஹாரிஸ் விமர்சித்துள்ளார்.

அமெரிக்காவில் வருகின்ற நவம்பர் மாதம் மூன்றாம் தேதி ஜனாதிபதி தேர்தல் நடக்க உள்ளது. அந்தத் தேர்தலில் குடியரசு கட்சி சார்பாக அமெரிக்காவின் தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். ஜனநாயக கட்சி சார்பாக ஜோ ஜோ பிடன் போட்டியிடுகின்றார். துணை ஜனாதிபதி பதவிக்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் போட்டியிட உள்ளார். ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு தேர்தல் பிரசாரம் அமெரிக்காவில் அனல் பறக்க நடந்து கொண்டிருக்கிறது. கொரோனா பாதிப்பு அமெரிக்காவில் நடக்கவிருக்கும் தேர்தலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என உலக அளவில் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தேர்தலுக்கு முன்னர் குருநாத் தடுப்பூசி வெளியிடப்படும் என டிரம்ப் அறிவித்துள்ளார். அதன் மூலமாக மக்களின் நம்பிக்கையை பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடித்து விடலாம் என அதிபர் டொனால்டு டிரம்ப் உறுதியாக நம்புகிறார். இதனைத் தொடர்ந்து ட்ரம்பின் அறிவிப்பை துணை ஜனாதிபதிக்கு போட்டியிடும் கமலா ஹாரிஸ் விமர்சனம் செய்துள்ளார். இதுபற்றி கமலா ஹாரிஸ் கூறும்போது, ” கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசி நவம்பர் மாதத்திற்கு முன்னர் கிடைத்தால், தடுப்பூசியின் திறன் மற்றும் பாதுகாப்பு விவகாரத்தில் ட்ரம்பின் வார்த்தையை நான் ஒருபோதும் நம்ப மாட்டேன்” என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |