கடந்த 2020 -ஆம் வருடம் நவம்பர் மாதம் அமெரிக்காவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் டிரம்ப் தோல்வியடைந்துள்ளார். ஆனால் அவர் தன்னுடைய தோல்வியை ஏற்றுக்கொள்ளாமல் தேர்தலில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். கடந்த ஆண்டு ஜனவரி 6-ஆம் தேதி தேர்தலில் வெற்றி பெற்ற ஜோபைடனுக்கு சான்றிதழ் வழங்குவதற்காக நாடாளுமன்றம் கூடியது. அப்போது ட்ரம்பின் ஆதரவாளர்கள் நாடாளுமன்றத்திற்குள் புகுந்து பெரும் கலவரத்தில் ஈடுபட்டதில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதுகுறித்து அமெரிக்க நாடாளுமன்ற குழு ஒன்றை வருடங்களுக்கும் மேலாக விசாரணை நடத்தி வருகின்றது. இதில் ஏராளமானோர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த கலவரத்தில் டிரம்பின் தொடர்பை குறித்தும் நாடாளுமன்ற குழு விசாரணை நடத்தியது. இதனையடுத்து நாடாளுமன்ற குழு தனது விசாரணையை நிறைவு செய்து விட்டதாகவும் கலவரம் தொடர்பாக ட்ரம்ப் மீது கிளர்ச்சியை தூண்டுதல் உட்பட 3 கிரிமினல் குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய நீதித்துறைக்கு பரிந்துரைக்க குழு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுகுறித்து அமெரிக்க செய்தி ஊடகங்கள் கூறியதாவது, இந்த குழு அடுத்த வாரம் தனது முழு விசாரணை அறிக்கையை வெளியிடும் எனவும் அப்போது ட்ரம்ப் மீதான குற்றச்சாட்டுகள் பகிரங்கமாக அறிவிக்கப்படும் எனவும் கூறியுள்ளது.