Categories
உலக செய்திகள்

அமெரிக்க நாட்டின் குடியுரிமை…. அதிகம் விரும்பும் இந்தியர்கள்…. வெளியான தகவல்….!!!

பிரபல நாட்டின் குடியுரிமையை விரும்பி பெற்றவர்களின் தகவல்கள் வெளியாகியுள்ளது.

அமெரிக்க நாட்டில் 246-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த சுதந்திர தினத்தை முன்னிட்டு வருடம் தோறும் அமெரிக்காவில் குடியுரிமை பெற்றவர்களை ஜூலை மாதத்தில் வரவேற்பது அங்கு வழக்கமாக இருக்கிறது. அதேப்போன்று நடப்பாண்டிலும் குடியுரிமை பெற்றவர்களை வரவேற்றனர். அப்போது அமெரிக்காவின் குடியுரிமையை விரும்பி பெற்றவர்களின் தகவல்களை வெளியிட்டனர். இதில் மெக்சிகோ முதல் இடத்திலும், இந்தியா 2-வது இடத்திலும், பிலிப்பைன்ஸ் 3-வது இடத்திலும், கியூபா 4-வது இடத்திலும், டொமினிக்கன் 5-வது இடத்திலும் இருக்கிறது.

இந்நிலையில் கொரோனா பரவல் மற்றும் ஊரடங்கு போன்ற பல்வேறு சூழ்நிலைகளில் இந்தியர்கள் பலர் அமெரிக்க குடியுரிமையை விரும்பி பெற்றது ஆச்சரியமாக இருக்கிறது என்று கூறப்படுகிறது. இதனையடுத்து நடப்பாண்டில் மட்டும் சுமார் 6 லட்சம் பேருக்கு குடியுரிமை வழங்கப்பட்டதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் அமெரிக்க நாட்டின் குடியுரிமையை பெற வேண்டும் என்றால் அந்நாட்டில் 5 வருடங்கள் வசித்திருக்க வேண்டும். அதன் பிறகு பல்வேறு நிபந்தனைகள் மற்றும் கட்டுப்பாடுகளை ஏற்று விண்ணப்பங்களை பூர்த்தி செய்து கொடுப்பவர்களுக்கு குடியுரிமை ஆனது வழங்கப்படும்.

Categories

Tech |