அமெரிக்க நிறுவனங்களின் தகவல்கள் சைபர் தாக்குதல் செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் முக்கிய நிறுவனங்கள் அதாவது மைக்ரோசாப்ட் உள்பட 500 நிறுவனங்களில் இருந்த தகவல்களை ஹேக்கர்கள் ஹேக் செய்துள்ளனர். இது 9 மாதங்களாக கண்டுபிடிக்கப்படவில்லை. அமெரிக்க வரலாற்றில் இது மிகப் பெரிய சைபர் தாக்குதல்ஆகும் இதனாலேயே இது ஒன்பது மாதங்கள் கவனிக்கப்படாமல் இருந்துள்ளது என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.
நாட்டின் முக்கிய தகவல்களான அணுவாயுத பாதுகாப்பு, FBI, அரசு கஜானா போன்றவற்றை திருடி இருப்பார்களோ என்ற சந்தேகத்தில் உள்ளனர். இல்லினாய்ஸிலுள்ள செனேட்டர், Dick Durbin கூறியதாவது, இதனை ரஷ்ய நாட்டினர் தான் செய்திருப்பார்கள். அவர்கள் இதற்கான விலை மதிப்பை கொடுத்தே ஆக வேண்டும் என்றார்.
மேலும் இது போன்ற தொந்தரவுகளை செய்து நமது பாதுகாப்பு எல்லையை மீறிய ரஷ்யர்களுக்கு ஏற்ற பதிலடியை திரும்ப கொடுத்தே ஆக வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். ஆனால் ரஷ்யா இதனை செய்ததாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. எனினும் தனியார் பாதுகாப்பு நிறுவனங்கள், “இதற்கான அனைத்து அறிகுறிகளும் ரஷ்யாவை தான் குறிப்பிடுகின்றன” என்று கூறியுள்ளது. இதற்கிடையில் ரஷ்யா, “தங்களுக்கும் இதற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை” என்று மறுப்பு தெரிவித்துள்ளது