ஈராக்கின் அரசியல் கட்சி, போராளிகள் குழுவின் தலைவர் Qais Khazhali நாட்டிலிருந்து அமெரிக்க படைகள் வெளியேறும் வரை தொடர் தாக்குதல்கள் நடத்தப்படும் என்று எச்சரித்துள்ளார்.
ஈராக்கில் இருக்கும் அமெரிக்க படைகள் மற்றும் தூதரக ஊழியர்கள் மீதான தாக்குதல்கள் கடந்த பல வருடங்களாக தொடர்ந்து நடக்கிறது. இதற்கிடையில் ஈராக் பாராளுமன்றம் நாட்டில் இருக்கும் பிற நாட்டு படைகள் அனைத்தும் உடனே வெளியேற ஒரு மசோதாவை நிறைவேற்றியுள்ளது.
ஆனால் தன் படைகளை திரும்பப் பெறக்கூடிய திட்டத்தை அமெரிக்கா தற்போது வரை அறிவிக்கவில்லை. இந்நிலையில் Qais Khazhali ஈராக்கிலிருந்து வெளியேறும் வரை அமெரிக்க படைகள் மீது தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தப்படும் என்று எச்சரித்துள்ளார். மேலும் அமெரிக்காவின் ராணுவ தளங்களுக்கு ஈராக்கில் இடம் கிடையாது என்றும் எங்களது வாக்குறுதி மற்றும் முடிவு தான் இந்த எதிர்ப்பு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.