அமெரிக்க ராணுவ துணை கீழ்நிலைச் செயலாளர் என்ற உயர் பதவிக்கு இந்திய வம்சாவளியான டாக்டர் ராதா ஐயங்கார் பிளம்பை ஜனாதிபதி ஜோ பைடன் நியமித்துள்ளார். இந்தப் பெண் அதிகாரி, இதுவரை கூகுளில் நம்பிக்கை, பாதுகாப்பான ஆராய்ச்சி மற்றும் நுண்ணறிவு இயக்குனர் பதவி வகித்து வந்தார். அதுமட்டுமில்லாமல் பேஸ்புக் நிறுவனத்தில் கொள்கை பகுப்பாய்வு பிரிவின் உலகளாவிய தலைவராகவும், கார்ப்பரேஷனில் மூத்த பொருளாதார நிபுணராகவும் வாஷிங்டன் வெள்ளை மாளிகை தேசிய பாதுகாப்பு கவுன்சிலில் மூத்த அதிகாரியாகவும் பதவி வகித்து வருகிறார்.
மேலும் அமெரிக்காவின் நியூஜெர்சியில் உள்ள பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் முனைவர் மற்றும் எம்.எஸ். பட்டங்களை இவர் பெற்றுள்ளார். அதனைத் தொடர்ந்து அமெரிக்காவில் இந்தியர்களும், இந்திய வம்சாவளிகளும் உயர் பதவியில் அமர்த்துவது அவர்களின் அறிவாற்றலுக்கும், செயல் திறனுக்கும் சான்றாக அமைகிறது.