கடந்த ஆகஸ்ட் மாதம் தீவிரவாதிகள் என்று நினைத்து ட்ரோன் மூலம் நடத்திய தாக்குதலில் ஆப்கன் பொதுமக்கள் 10 பேர் உயிரிழந்தது தொடர்பான குற்றத்திற்கு அமெரிக்க வீரர்கள் எவருக்கும் தண்டனைகள் வழங்கப்படாது என்று அந்நாட்டின் ராணுவத் தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது.
தலிபான் பயங்கரவாதிகள் ஆப்கானிஸ்தான் நாட்டை கைப்பற்றியதையடுத்து அங்கிருந்து அமெரிக்க படைகள் வெளியேற தொடங்கியுள்ளது. அந்த சமயம் ஐ.எஸ் தீவிரவாத குழுவினர்கள் திடீரென அதிபயங்கர தாக்குதலை நடத்தியுள்ளார்கள்.
இந்த தாக்குதலுக்குப் பின்னர் அமெரிக்கப் படைகள் கடந்த ஆகஸ்ட் மாதம் தீவிரவாதி என்று நினைத்து ட்ரோன் மூலம் வெடிகுண்டு தாக்குதலை நடத்தியுள்ளார்கள். ஆனால் இந்த தாக்குதலில் ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்த அப்பாவி பொதுமக்கள் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்கள்.
இந்த குற்றச் சம்பவம் தொடர்பாக அமெரிக்க நாட்டின் பாதுகாப்பு துறை அமைச்சரான லாயிட் ஆஸ்டினிடம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்த பரிந்துரையை பாதுகாப்பு துறை அமைச்சர் ஏற்றுக்கொண்டதால் மேற்குறிப்பிட்டுள்ள குற்ற சம்பவத்தில் ஈடுபட்டுள்ள அமெரிக்க வீரர்கள் எவரும் தண்டிக்கப்படமாட்டார்கள் என்று அந்நாட்டின் ராணுவத் தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது.