அமெரிக்க குடியுரிமை மசோதா 2021யை அதிபர் ஜோ பிடன் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தினார்.
இந்த சட்டம் இயற்றப்பட்டால் அமெரிக்காவில் வாழும் லட்சக்கணக்கான இந்தியர்கள் பயனடைவார்கள் என்று கூறப்படுகிறது. அமெரிக்க அதிபராக பதவி ஏற்றது முதல் ஜோ பைடன் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். முன்னாள் அதிபர் டிரம்ப் நிர்வாகத்தால் கொண்டுவரப்பட்ட சர்சைக்குரிய திட்டங்கள் மற்றும் கொள்கைகளை மாற்றியமைத்து வருகிறார்.
இந்நிலையில் அமெரிக்க நாடாளுமன்றத்தில் அமெரிக்க குடியுரிமை சட்டம் 2021 என்ற மசோதாவை அதிபர் ஜோ – பைடன் அறிமுகம் செய்துள்ளார். இந்த மசோதா பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் சபையில் நிறைவேற்றப்பட்ட பிறகு அதிபர் ஜோ பைடன் கையொப்பமிட்டு சட்டமாகப்பட உள்ளது. இந்த குடியேற்ற மசோதா முறையான ஆவணங்கள் இல்லாமல் அமெரிக்காவில் வேலை பார்த்து வரும் ஒரு கோடியே 10 லட்சம் பேருக்கு குடியுரிமை வழங்க வழிவகை செய்யும் என்று கூறப்படுகிறது.
வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு நிரந்தர குடியுரிமைக்கான கிரீன் கார்டு வழங்குவதில் உள்ள சிக்கல்களை களைவது, H1B விசாதாரர்களுக்கு பணி அங்கீகாரம் வழங்குவது ஆகியவையும் இந்த மசோதாவின் முக்கிய அம்சங்களாக கூறப்படுகின்றன. இதன் மூலம் லட்சக்கணக்கான இந்தியர்கள் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.