அமேசான் மற்றும் ஃபிளிப்கார்டு போன்ற ஆன்லைன் தளங்கள் அவ்வப்போது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அதிரடி அவர்களை அறிவித்து வருகிறது. அவ்வகையில் அமேசான் நிறுவனம் மான்சூன் கார்னிவல் சேல் என்ற பெயரில் அதிரடி ஆபர் களை அள்ளி வீசி வருகிறது. ஜூன் 7-ஆம் தேதி தொடங்கிய இந்த ஆஃபர் விற்பனை வருகின்ற 12ம் தேதியுடன் நிறைவடைகிறது.
அதில் வாட்டர் ப்ரூப், ஸ்மார்ட் போன்கள், எலக்ட்ரானிக்ஸ், டிவி,வீடு மற்றும் சமையலறைக்கு தேவையான ஆயிரக்கணக்கான பொருட்கள் பெரும் தள்ளுபடி மற்றும் கவர்ச்சிகரமான சலுகையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதற்கு அதிரடி தள்ளுபடிகளை அமேசான் நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி அமேசான் மான்சூன் கார்ணிவல்60 சதவீதம் வரை தள்ளுபடி மற்றும் விற்பனையாளர்களிடம் இருந்து கூடுதல் சலுகைகளுடன் கிடைக்கக்கூடிய சில பொருட்களையும் பட்டியலிட்டுள்ளது.
அதன்படி ரூ.22,900 மதிப்புள்ள சாம்சங் 32 இன்ச் ஸ்மார்ட் டிவி-யின் விலை அமேசானில் ரூ.15, 990. இதில் ரூ.4,110 எக்சேஞ்சு சலுகையும் அமேசான் அறிவித்துள்ளது. இதனைப் போல அனைத்து பொருள்களுக்கும் அதிரடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. மேலும் சிட்டி வங்கியின் கிரெடிட் கார்ட் அல்லது டெபிட் கார்டை பயன்படுத்தினால் 1,500 ரூபாய் தள்ளுபடியும் உள்ளது. எனவே தாமதிக்காமல் உடனே ஆர்டர் செய்த பொருளை வாங்கிக் கொள்ளுங்கள்.