90 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வின் மூலம் 90,00 புதிய தாவர வகை இனங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்கள்.
90 நாடுகளிலுள்ள தாவர இனங்களின் எண்ணிக்கை உட்பட பலவகைகளில் ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி உலகளவில் 90,000 புதிய தாவர வகை இனங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளதாக சமீபத்தில் வெளியான அறிக்கை மூலம் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.
மேலும் உலகளவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் புதிதாக 9,000 ரத்திற்கும் அதிகமான தாவர இனங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த ஆய்வு உலகளவில் தாவர இனங்களை வகைப்படுத்துவதில் முக்கிய பங்காற்றும் என்று அறிக்கையின் முதன்மை ஆசிரியரான ஜிங் ஜிங் லியாக் கூறியுள்ளார்.
இந்த ஆய்வறிக்கை குறித்து அவர் கூறியதாவது, அமேசான் காடுகள் தான் புதிய வகை தாவரங்களை கொண்ட நிலப்பரப்பில் முதலிடத்தில் உள்ளதாக தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி ஒரு ஹெக்டேருக்கு 200 தாவரங்கள் அமேசான் காடுகளில் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.