Categories
தேசிய செய்திகள்

அமேசான் கிடங்கில்…. 38 ஐபோன்கள் திருட்டு…. 2 ஊழியர்கள் கைது …!!

ஹரியானா மாநிலம் பிலாஸ்பூர் பகுதிகளில் உள்ள அமேசான் நிறுவனம் கிடங்கிலிருந்து 38 ஆப்பிள் ஐபோன்களை திருடிய 2 ஊழியர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ஹரியானா மாநிலம் பிலாஸ்பூர் பகுதிகளில்  ஆன்லைன் விற்பனை தலமான அமேசான் கிடங்கு அமைந்துள்ளது. கொரோனா தொற்று பரவாலால்  இந்த கிடங்கில் ஊழியர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு  பாதுகாப்பு சோதனைகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்திக் கொண்ட இரு ஊழியர்கள் கிடங்கில் இருந்து பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள 38 ஐபோன்களை திருடிச் சென்றுள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து  தேடுதல் வேட்டை மேற்கொண்ட காவல்துறையினர் இருவரையும் கைது செய்து திருடப்பட்ட ஐபோன்களை மீட்டுள்ளனர்.

Categories

Tech |