Categories
மாநில செய்திகள்

அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் 2022… இந்த வங்கியில் கணக்கு இருக்கா…? அப்போ ஆஃபர்களை அள்ளலாம்…!!!!

பண்டிகை காலம் ஆரம்பம் ஆகிவிட்டாலே பல நிறுவனங்களும் பல்வேறு விதமான சிறப்பு சலுகைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகின்றது. அதேபோல் ஆன்லைன் ஷாப்பிங் தளங்களும் மக்களை கவரும் விதமாக பல கவர்ச்சிகரமான சலுகைகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் பண்டிகை காலம் வருவதே முன்னிட்டு தற்போது இந்தியாவில் அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சேல் 2022 ஆரம்பமாகி இருக்கிறது. பிரைம் சந்தாதாரர்களுக்கான அமேசான் நவராத்திரி விற்பனை நேற்று முதல் கோலாகலமாக தொடங்கியுள்ளது. வாடிக்கையாளர்களுக்கு எத்தகைய தள்ளுபடிகள் கிடைக்கப் போகிறது என்பதையும் இந்த ஷாப்பிங் தளம் வெளியிட்டு இருக்கிறது.

மேலும் ஆனுவல் சேல் எப்போது முடியும் என்பது பற்றி அமேசான் கூறவில்லை அதே சமயம் கிரேட் இந்தியன் பெஸ்டிவல் விற்பனை 2022 கிட்டத்தட்ட ஒரு மாத காலம் வரை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கடந்த வருடம் அமேசான் ஆப்பிள் ஐபோன் 11, ஆப்பிள் ஐபோன் 12, சாம்சங் கேலக்ஸி எஸ் இ 20 se 1plus 9 pro realme gd மற்றும் பிற ஸ்மார்ட் ஃபோன்களுக்கு சிறந்த சலுகைகளை வழங்கியுள்ளது. இந்த நிலையில் இந்த வருடமும் கடந்த வருடம் போலவே ஆப்பிள் ஐபோன் 13 சாம்சங் கேலக்ஸி எஸ் 22 ப்ளஸ் மற்றும் பிற சாதனங்களுக்கு அமேசான் பல அற்புதமான சலுகைகளை வழங்க உள்ளது. அமேசான் கிரேட் இந்தியன் பெஸ்டிவல் விற்பனை 2022க்கு நிறுவனம் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவுடன் கூட்டணி அமைத்துள்ளது.

அதாவது இந்த சலுகை கால விற்பனையின் போதும் எஸ் பி ஐ வங்கியின் கிரெடிட் அல்லது டெபிட் கார்டை பயன்படுத்தி ஷாப்பிங் செய்பவர்களுக்கு 10% உடனடி தள்ளுபடி கிடைக்கும் எனவும் கூறப்பட்டிருக்கிறது. மேலும் 10 சதவீதம் உடனடி தள்ளுபடி மூலமாக 1500 ரூபாய் வரை தள்ளுபடி கிடக்கிறது கடந்த வருடம் அமேசான் பல்வேறு வங்கிகளுடன் தன்னை இணைத்து இருக்கிறது. அதனால் பல வாங்கி வாடிக்கையாளர்களும் அமேசானின் இந்த பண்டிகை கால சலுகை பயன்படுத்திக் கொள்ள முடியும். மேலும் அமேசான் நிறுவனம் பஜாஜ் பின்சர்வ் காடுகளில் எக்ஸ்சேஞ்ச் டீல்கள் மற்றும் நோகாஸ் இஎம்ஐ போன்றவற்றையும் வழங்குகிறது. அமேசான் கிரேட் இந்தியன் பெஸ்டிவல் விற்பனை 2021 ஆப்பிள் சாம்சங், ஒன் பிளஸ், சியோமி மற்றும் பிற பிராண்டுகளின் ஸ்மார்ட் ஃபோன்களை வாங்குபவர்கள் 40 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகின்றது. இது மட்டுமல்லாமல் ஆப்பிள் ஏர்பாட்ஸ், ஐ பேட், ஸ்மார்ட் வாட்ச், லேப்டாப் மற்றும் பிறப்புகளுக்கு 75 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. அது மட்டுமில்லாமல் வீட்டு உபயோகப் பொருட்களுக்கு 75 சதவிகிதம் வரை தள்ளுபடி மற்றும் சில அத்தியாவசிய பொருட்களுக்கு 65 சதவீதம் வரை தள்ளுபடி வழங்குகின்றது.

Categories

Tech |