Categories
தேசிய செய்திகள்

அமேசான், கூகுள், மைக்ரோசாப்ட், இன்போசிஸ் நிறுவன ஊழியர்களுக்கு…. வெளியான செம ஹேப்பி நியூஸ்….!!!!

நாடு முழுதும் கொரோனா  தாக்கம் குறைந்து வருவதால் அமேசான், கூகுள், மைக்ரோசாப்ட் மற்றும் பிற நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு சம்பளம்உயர்வை அறிவித்து இருப்பதாக கூறப்படுகிறது. அந்த அடிப்படையில் அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனமான அமேசான், அமெரிக்க ஊழியர்களுக்கான முந்தைய அதிகபட்சம் சம்பளமான 160,000 டாலரில் இருந்து 350,000 டாலர் என்று அதன் அடிப்படை ஊதிய வரம்பை இருமடங்காக அதிகரித்துள்ளது. அதன்பின் இந்த வருட ஜனவரியில் கூகுள் தன் உயர் அதிகாரிகளின் சம்பளத்தை 650,000 டாலரில் இருந்து 1 மில்லியனாக உயர்த்தியது. அதனை தொடர்ந்து மைக்ரோசாப்ட் நிறுவனமானது அதன் உலகளாவிய தகுதி பட்ஜெட்டை இரட்டிப்பாக்கியது.

இது தொடர்பாக மைக்ரோசாப்ட் தலைமை நிர்வாக அதிகாரி சத்யா நாதெல்லா தன் ஊழியர்களுக்கு அனுப்பிய ஒரு மின்னஞ்சலில், மைக்ரோசாப்ட் உலகளாவிய தகுதி வரவு செலவுத்திட்டத்தை ஏறக்குறைய இருமடங்காக அதிகரித்துள்ளது. அது அவர்களின் தொழில் வாழ்க்கையின் நடுவில் இருப்பவர்களுக்கு அதிக ஊதியத்தை ஒதுக்குவதாகவும் தெரிவித்துள்ளார். அத்துடன் இது அந்நிறுவனத்தின் வழக்கமான ஊதிய பட்ஜெட்டை விடவும் அதிகமாகும். இந்தியாவின் முன்னணி ஐ.டி நிறுவனமான இன்போசிஸ் தன் ஊழியர்களுக்கு சம்பளம்உயர்வு, போனஸ், பதவி உயர்வு ஆகிய சலுகைகளை வழங்க முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது இன்போசிஸ் ஊழியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது இன்போசிஸ் நிறுவனம் தனக்கு இந்தியாவிலுள்ள ஊழியர்களுக்கு சுமார் 12 சதவீதம் முதல் 13 சதவீதம் சம்பளஉயர்வு வழங்குவதற்கு முடிவு செய்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமல்லாமல் சிறந்த ஊழியர்களுக்கு 20 -25 சதவீதம் சம்பள உயர்வு,போனஸ் மற்றும் இன்னும் சிறந்த பதவிகள் வழங்கவும் இன்போசிஸ் திட்டமிட்டுள்ளது. இதுதவிர சிறப்பாக செயல்பட்ட ஊழியர்களுக்கு ஏஐ, மெஷின் லேர்னிங் ஆகிய தொழில்நுட்ப திறன்களை கற்றுக்கொள்ள இன்ஃபோசிஸ் வாய்ப்பு வழங்குகிறது.

Categories

Tech |