அமெரிக்காவின் அமேசான் நிறுவனத்தில் பணியாற்றும் 20 ஆயிரம் ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
உலகின் முன்னணி நிறுவனமான அமேசான் இ-காமர்ஸ் துறையில் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கிறது. அந்த நிறுவனத்தில் 13 லட்சத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றிக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் அமெரிக்காவில் உள்ள அமேசான் நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும் ஊழியர்களின் 20,000 பேருக்கு பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் கூறியுள்ளது.
அமேசான் நிறுவனம் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஊழியர்களின் விவரங்களை மறைத்து வருவதாக சில குற்றச்சாட்டுகள் எழுந்தன, அதனால் தற்போது அமேசான் நிறுவனம் இந்த விளக்கத்தை அளித்துள்ளது.அந்நிறுவனத்தில் நாளொன்றுக்கு 50 ஆயிரம் ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்து வருவதாகவும்,அதில் அவர்கள் எதிர்பார்ப்பதை விட குறைவாகவே வரும் பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டு வருவதாகவும் அமேசான் நிறுவனம் கூறியுள்ளது.