அமேசான் நிறுவன தலைமைச் செயல் அதிகாரி ஜெஃப் பெசோஸ் பதவி விலகுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
அமேசான் நிறுவனம் இன்றைய நிலையில் மிகப்பெரிய ஆன்லைன் வர்த்தகமாக செயல்பட்டு வருகின்றது. மக்கள் அனைவரும் தங்களுக்கு தேவையான பொருட்களை அமேசான் மூலம் ஆர்டர் செய்து வாங்கிக் கொள்கின்றனர். மேலும் இந்த அமேசான் நிறுவனத்தில் பல லட்சம் பேர் வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர். அமெரிக்க நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியான ஜெஃப் பெசோஸ் தனது பதவியிலிருந்து விலகிக்கொள்வதாக அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.
1994ல் சியாட்டிலில் கார் நிறுத்தும் இடத்தில் அமேசான் நிறுவனத்தை ஜெஃப் பெசோஸ் தொடங்கினார். 27 ஆண்டுகளில் 119 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள நிறுவனமாக அமேசான் நிறுவனத்தை மாற்றியுள்ளார். இதையடுத்து புதிய தலைமைச் செயல் அதிகாரியாக ஆன்டி ஜெஸ்ஸி நியமிக்கப்பட்டுள்ளார். பதவி விலகியதை அடுத்து பெசோஸ் தனது ப்ளூ ஓரிஜன் நிறுவனத்தில் வான்வெளியில் கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.