Categories
Tech டெக்னாலஜி

அமேசான், நெட்ஃபிளிக்ஸ் இலவசம்…. அன்லிமிடெட் காலிங்…. ஜியோவின் அசத்தல் பிளான்….!!!!

JIO ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்கள், தங்களுக்கு ஏற்றார் போல ரீச்சார்ஜ் செய்துகொள்ளும் அடிப்படையில் பல பிளான்களை வைத்திருக்கிறது ஜியோ. அதே சமயத்தில் ப்ரீப்பெய்ட் வாடிக்கையாளர்களுடன் ஒப்பிடும் போது, போஸ்ட்பெய்ட் வாடிக்கையாளர்களுக்கு அப்படியான பலன்கள் எதுவும் இருக்கும் திட்டங்கள் நிறைய இல்லை. தற்போது JIO மிகக்குறைந்த விலையில் சூப்பரான அம்சங்களை வைத்து இருக்கும் திட்டங்களை பற்றிதான் பார்க்க உள்ளோம். JIOவின் போஸ்ட்பெய்ட் திட்டத்தில் ரூ.399 பிளானை பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்க வாய்ப்புகள் இருக்கிறது. ஏனெனில் இத்திட்டத்தில் 75GP டேட்டா வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும்.

அத்துடன் கூடுதலாக செலவழிக்கும் ஒரு GP டேட்டாவுக்கு 10 ருபாய் மட்டும் செலவழித்தால் போதும். இது தவிர்த்து இந்த ரீச்சார்ஜ் திட்டத்தில் 200 GP டேட்டா ரோல் ஓவர் கிடைக்கும். ஆகவே உங்களது டேட்டா வீணாகாது. அதுமட்டுமல்லாமல் இத்திட்டத்தில் உங்களுக்கு வரம்பற்ற குரல் அழைப்பும் வழங்கப்படுகிறது. jioவின் இந்த போஸ்ட்பெய்ட் திட்டத்தில் பல்வேறு நன்மைகள் மட்டுமே இருக்கிறது. நாளொன்றுக்கு 100 sms பெறுவீர்கள். மேலும் நெட்ஃபிளிக்ஸ் மற்றும் அமேசான் பிரைம் வீடியோவுடன் jio டிவி, jio செக்யூரிட்டி மற்றும் jio கிளவுட் போன்றவற்றின் இலவச சந்தாவைப் பெறுவீர்கள்.

Categories

Tech |