Categories
பல்சுவை

அமேசான், பிளிப்கார்டின் பம்பர் தள்ளுபடி…. வரும் 23 ஆம் தேதி முதல்…. வெளியான சூப்பர் தகவல்….!!!!

வரும் 23 ஆம் தேதிமுதல் அமேசான்,பிளிப் கார்ட் ஆகிய இ-காமர்ஸ் வலைத்தளங்களானது தங்களது பண்டிகைக்கால விற்பனையினை அறிவித்து உள்ளது. இதில் அமேசானின் பண்டிகை கால விற்பனையானது 28-29 தினங்களுக்கு நீடிக்கும். நிறுவனம் இந்த விற்பனைக்கு அமேசான் கிரேட் இந்தியன் பெஸ்டிவல் (Amazon Great Indian Festival) என பெயரிட்டுள்ளது. இதற்கிடையில் பிளிப் கார்ட் தன் பிக்பில்லியன் டேஸ் 2022 விற்பனையை செப்டம்பர் இறுதிவரை தொடரும். அமேசான் இந்தியாவினுடைய துணைத் தலைவரான நூர்படேல், இப்பண்டிகை சீசன்விற்பனையில் பங்கேற்கும் 11 லட்சம் விற்பனையாளர்களை அமேசான் கொண்டுள்ளது என பிடிஐ இடம் தெரிவித்து இருக்கிறார். இவற்றில் 2 லட்சம் உள்ளூர் கடைகளாக இருக்கும்.

அமேசான் நாட்டிலுள்ள அணுகக்கூடிய அனைத்து பின்கோடுகளிலும் டெலிவரி செய்யும் என கூறியுள்ளது. தொற்று நோயால் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையால் அமேசான் 2 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் வருவதால், இந்த முறை பண்டிகைகாலங்கள் இன்னும் சிறப்புவாய்ந்ததாக இருக்கும் என நிறுவனம் தெரிவித்து உள்ளது. அமேசான் பிரைம் உறுப்பினர்கள் இந்த விற்பனையை 24 மணிநேரத்திற்கு முன்பே அணுக முடியும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி , பிரைம் உறுப்பினர்களுக்கு வரும் 23 ஆம் தேதிக்கு ஒரு நாள் முன்னதாகவே விற்பனையில் பங்கேற்க வாய்ப்பு கிடைக்கும். இந்த பண்டிகைக்காலத்தில் அனைத்து வகைகளிலும் 2000க்கும்  அதிகமான புது அறிமுகங்களை நிறுவனம் எதிர்பார்க்கிறது என நூர்படேல் கூறினார்.

இந்நிகழ்வின் முதற்கட்டமாக பாரத ஸ்டேட் வங்கி பங்குதாரராக செயல்படும். எஸ்.பி.ஐ டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளுக்கு 10 சதவீதம் உடனடி தள்ளுபடியும் வழங்கப்படும். இந்த விற்பனை தீபாவளிக்கு 3-4 நாட்கள் முன்பு வரை இருக்கும் என நூர் படேல் தெரிவித்தார். “150 க்கும் அதிகமான இன்ப்ளூயன்சர்களுடன் நாங்கள் பணிபுரிந்து வருகிறோம். அவர்கள் 600 லைவ் ஸ்ட்ரீம்களைச் செய்வர். இது வாடிக்கையாளர் வாங்குவதை எளிதாக்கும்” என்றும் அவர் கூறினார்.

இதுதவிர்த்து வாடிக்கையாளர்களுக்கு லைவ் ஒலி (LIVE-Only) தள்ளுபடி வழங்கும் வசதியும் இருக்கும்.  தன்னிடம் 4.2 லட்சம் விற்பனை கூட்டாளர்கள் இருப்பதாக பிளிப்கார்ட் கூறுகிறது. அமிதாப் பச்சன், ஆலியா பட், எம்எஸ் தோனி ஆகிய பல்வேறு பிரபலங்களுடன் பிக் பில்லியன் டேஸ் நிகழ்வை பிளிப்கார்ட் தொடங்கியுள்ளது. 130 பிக்பில்லியன் டேஸ் ஸ்பெஷல் அறிவிக்கப்பட்டு இருப்பதாகவும், பேஷன், எலக்ட்ரானிக்ஸ், மொபைல் போன்கள், பெரிய உபகரணங்கள், தனி நபர் பராமரிப்பு மற்றும் கைவினைப் பொருட்கள் உள்ளிட்ட 90 பிராண்டுகள் இதனை தயார்செய்துள்ளதாகவும் பிளிப்கார்ட் தெரிவித்துள்ளது.

Categories

Tech |