இந்தியாவில் ஆன்லைன் ஷாப்பிங்கில் முக்கியமாக 2 தளங்கள் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. அதாவது அமேசான், பிளிப்கார்ட் ஆகிய இரண்டுமே இந்திய இ-காமர்ஸ் துறையின் ஜாம்பவான்களாக கருதப்படுகிறது. இவை 2ம் இப்போது பெரும் தள்ளுபடி சலுகை விற்பனைகளை வழங்குகிறது. அதன்படி அமேசானில் இந்த விற்பனை கிரேட் இந்தியன் பெஸ்டிவல் எனும் பெயரில் தரப்படுகிறது. அதே சமயத்தில் பிளிப் கார்ட்டில் பிக் பில்லியன் டேஸ் விற்பனை எனும் சலுகை விற்பனையானது நடந்துவருகிறது. இவற்றில் பெரும்பாலன பொருட்களுக்கு தள்ளுபடிகள் அள்ளி வழங்கப்படுகிறது. பிளிப்கார்ட், அமேசானின் சலுகை விற்பனையானது கடந்த 23ஆம் தேதி இரவு 12 மணியில் இருந்து துவங்கியது குறிப்பிடத்தக்கது.
இவற்றில் ஸ்மார்ட்போன்கள் முதல் ஆடைகள், வீட்டு உபயோகப்பொருட்கள், கேஜெட்டுகள் வரை பலதரப்பட்ட தயாரிப்புகளுக்கு பெரும் தள்ளுபடி வழங்கப்படுகிறது. வழக்கம்போல பிரைம் உறுப்பினர்களுக்கான விற்பனை ஒருநாள் முன்னதாகவே துவங்கியது. அதன்படி 22ம் தேதி முதலே சலுகை விலைகளில் உறுப்பினர்கள் வாங்கலாம். பிளிப்கார்ட் குறித்து பேசுகையில், நிறுவனம் தன் விற்பனையில் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் ஆக்சரீஸ் மீது 80 சதவீதம் வரை தள்ளுபடி அறிவித்து உள்ளது. தொலைக்காட்சிகளுக்கும், உபகரணங்களுக்கும் 80 சதவீதம் வரையிலும் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
இது தவிர்த்து பேஷன், அழகு, பொம்மை, விளையாட்டு மற்றும் பிறபொருட்களுக்கு 60-80 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. பிளிப்கார்ட்டில் உணவு மற்றும் பானங்கள், கிச்சன்-டைனிங்கில் 85 சதவீதம் வரை தள்ளுபடி சலுகையானது கிடைக்கிறது. அத்துடன் கதவு மெத்தைகளுக்கு 85 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. பிளிப்கார்ட்டைப் போன்றே அமேசானும் 2,000-க்கும் அதிகமான புது தயாரிப்புகளை இந்த முறை கிரேட் இந்தியன் விழாவில் அறிமுகப்படுத்தி இருக்கிறது. இந்த ஷாப்பிங் திருவிழாவின் போது அமேசான் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் ஆக்சஸரீஸ் மீது 75 சதவீதம்வரை தள்ளுபடி வழங்குகிறது. அதுமட்டுமல்லாமல் ஸ்மார்ட் போன்களுக்கு 40 சதவீதம் வரை தள்ளுபடி மற்றும் டிவி சாதனங்களுக்கு 70 சதவீதம் வரை தள்ளுபடி கிடைக்கிறது.
அதேசமயத்தில் பேஷன், வீடு, சமையலறை மற்றும் பிற பொருட்களுக்கு 80 சதவீதம் வரை தள்ளுபடி கிடைக்கிறது. இந்நிறுவனங்கள் விற்பனையாளர்கள் தங்களது வலைத்தளத்தின் வாயிலாக பொருட்களை விற்க ஒருதளத்தை வழங்குகிறது. அதற்கு பதில் விற்பனையில் கமிஷன் பெறுகிறது. அத்தகைய நிலையில் எந்தவொரு நிறுவன விற்பனையின் நோக்கமும் விற்பனை அளவை அதிகரிப்பதாகும். அதுபோன்ற சூழ்நிலையில் விற்பனை அளவு அதிகரிப்பது வாடிக்கையாளர் தளத்தையும் அதிகரிக்கிறது. மெங்கும் அமேசான், பிளிப்கார்ட் ஆகிய நிறுவனங்களும் வாடிக்கையாளர்களை கவரும் அடிப்படியில் பெரும் தள்ளுபடியை வழங்குகின்றன. அதுமட்டுமின்றி நிறுவனத்திடம் இருந்து அதிக அளவிலான சரக்குகளை வாங்கி பிறகு அதை ஆன்லைனில் விற்பனைக்கு வைப்பதால் லாபம் பெருகுகிறது.
இதுதவிர்த்து லாபம்= விற்பனை விலை – செலவு விலை என்பதுதான் வியாபாரத்தின் முக்கிய சூத்திரம் ஆகும். விலை என்பது தயாரிக்க எவ்வளவு செலவானது என்பதாகும். விற்பனை விலை என்பது தயாரிப்பு எந்த விலைக்கு விற்கப்பட்டது என்பதே ஆகும். எப்பொருளையும் அதிகளவில் விற்றால், அதன் விலை குறைவதுடன் வருமானம் அதிகரிக்கும். அதிக விற்பனையில் இலாப சதவீதம் குறைவாக இருப்பினும், அளவு அதிகரிப்பதால் வருவாய் அதிகரிக்கிறது. ஆகவே மொபைல், டிவி, லேப்டாப், ஏசி ஆகிய பொருட்கள் மொத்தமாக விற்பனை செய்வதால் மட்டுமே இவ்வளவு பெரிய தள்ளுபடியில் கிடைக்கிறது. இதுதவிர்த்து மொத்தமாக விற்பனை செய்யப்படுவதால் நிறுவனம் மற்றும் விற்பனையாளரின் லாபம் அதிகரிக்கிறது. அத்தகைய நிலையில் நிறுவனங்கள் தரும் விற்பனை சலுகை வாயிலாக விலைகள் மலிவாகி, விற்பனை அதிகரிக்கும். இதன் காரணமாக நிறுவனங்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு பெரும் லாபம் கிடைக்கிறது. அதனால் தான் இந்த விற்பனைக்கு அதிக வரவேற்பு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது..