அமேசான் ப்ரைம் மெம்பர்ஷிபின் விலையை 50% வரை அதிகரித்துள்ளது. அதன்படி, தற்போது 129 ரூபாய்க்கு இருக்கும் மாதாந்திர திட்டம் 50 ரூபாய் அதிகரித்து, 179 ரூபாயாக உள்ளது.
மேலும் 999 ரூபாயாக இருந்த வருடாந்திர மெம்பர்ஷிப் பிளான் 500 ரூபாய் அதிகரித்து, 1,499 ரூபாயாகவும், காலாண்டு பிளான் 329 இலிருந்து 459 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் இந்த மெம்பர்ஷிப் பிளான்கள் அமுலுக்கு வந்து விட்டன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விலை உயர்வினால் அமேசான் ப்ரைம்-ஐ பயன்படுத்துபவர்கள் மிகவும் வருத்தத்தில் உள்ளனர்.