புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் – திமுக கூட்டணி அரசுக்கு எதிராக கொண்டுவந்த நம்பிக்கை வாக்கெடுப்பு தோல்வி அடைந்ததை அடுத்து முதல் அமைச்சர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு கவிழ்ந்தது. இதைத்தொடர்ந்து முதல்வர் நாராயணசாமி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் சந்தித்து ராஜினாமா கடிதத்தை கொடுத்தார்.
மேலும் அமைச்சரவை ராஜினாமா பெறுவதற்கான கடிதத்தையும் கொடுத்ததாக செய்தியாளரிடம் தெரிவித்தார். இந்த நிலையில் அமைச்சரவை ராஜினாமா தொடர்பாக கொடுத்த கடிதம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.