Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

அமைச்சரின் வீட்டை முற்றுகையிட்ட பொதுமக்கள்…. திண்டுக்கல்லில் பரபரப்பு…!!

அமைச்சரின் வீட்டை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள குடைபாறைப்பட்டி பிஸ்மி நகர் பகுதியில் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் பொதுமக்களுக்கு தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில் மாதத்திற்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யப்படுவதால் பொதுமக்கள் அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்துள்ளனர். ஆனால் அதிகாரிகள் சார்பில் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இதனால் கோபமடைந்த பொதுமக்கள் திண்டுக்கல் கோவிந்தாபுரத்தில் இருக்கும் கூட்டுறவு துறை அமைச்சர் பெரியசாமியின் வீட்டை முற்றுகையிட்டு குடிநீர் கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனையடுத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போது குடிநீர் விநியோகிக்க அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்த பிறகு பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Categories

Tech |