அமலாக்கத்துறை அதிகாரிகளின் சோதனையின் போது நடிகை அர்பிதா முகர்ஜியின் வீட்டில் இருந்து 21.2 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சென்ற 2016 ஆம் வருடம் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களை நியமிக்க 100 கோடிக்கு ஊழல் நடந்ததாக புகார் எழுந்தது. இதைத்தொடர்ந்து இவ்வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டு அமலாக்க துறையும் விசாரணை செய்தது. இந்த நிலையில் மேற்குவங்க தொழில்துறை அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி ஊழல் செய்ததாக சென்ற 23ஆம் தேதி காலை அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரை கைது செய்தார்கள்.
இதையடுத்து அமைச்சருக்கு மிகவும் பழக்கமான நடிகை அர்பிதா வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. அதில் அவரின் வீட்டிலிருந்து 21.2 கோடி ரொக்கமும் 79 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் மற்றும் 54 லட்சம் வரை உள்ள வெளிநாட்டு பணம், 22 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. நடிகை அர்பிதா சென்ற 2004 ஆம் வருடம் மாடலாக கெரியரை தொடங்கி படங்களில் நடிக்க ஆரம்பித்தார் குறிப்பிடத்தக்கது.