மின்சார விநியோகத்தில் தனியார் நிறுவனத்திற்கு சிறப்பு சலுகை வழங்குவதாக திமுக அரசை குற்றம் சாட்டிய அண்ணாமலைக்கு அரசியல் அரிச்சுவடி கூட தெரியாது என்றும் அண்ணாமலை மண்டையில் சரக்கு ஒன்றும் இல்லை என்றும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். அதுமட்டுமின்றி இன்னும் 24 மணி நேரத்தில் இதற்கான ஆதாரத்தை காண்பிக்கவில்லை என்றால் அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மணல் திருடும் அமைச்சர் என் மண்டையில் களிமண் என்கிறார். இருக்கட்டும் எனக்கு பெருமைதான். களிமண்ணை வைத்து பிள்ளையார் சிலை செய்து புண்ணியம் தேடட்டும் என்னை வைத்து பாவம் மட்டுமே சம்பாதிக்க முடியும் நினைவிருக்கிறதா 11 மணி 5 நிமிடம் வாக்குறுதி என்று பதிலடி கொடுத்துள்ளார்