பஞ்சாப் மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றது.
இந்நிலையில் கடந்த 16 ஆம் தேதி பஞ்சாப் மாநிலத்தின் புதிய முதலமைச்சராக ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த பகவந்த் மன் மற்றும் அமைச்சர்கள் பதவியேற்றனர். இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் வெற்றி பெற்ற எம்எல்ஏக்களுடன் ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக பேசினார். அதில் அவர் கூறியதாவது, பஞ்சாப் மாநிலத்தில் புதிதாக பதவியேற்ற அமைச்சர்கள் அனைவருக்கும் முதல்வர் பக்வந்த் மன் விளக்கு வைத்துள்ளார்.
அந்த இலக்குகளை நிறைவேற்றாத பட்சத்தில் எம்எல்ஏக்கள் பதவி விலகும்படி வலியுறுத்த படுவார். பழைய அமைச்சர்களுக்கு பாதுகாப்பு விலக்கிக்கொள்ளப்பட்டது. அந்த பாதுகாப்பு தற்போது பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது. சேதமடைந்த பயிர்களுக்கு நிவாரணம் வழங்க ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எம்எல்ஏக்கள் அனைவரும் சண்டிகரில் அமர்ந்திருக்க கூடாது. அவ்வாறு இருக்கும் பட்சத்தில் குதிரை பேரத்தில் சிக்கிக்கொள்ள வாய்ப்புள்ளது. ஒவ்வொரு அமைச்சரும் கிராமங்கள் தோறும் சென்று மக்கள் குறைகளைத் தீர்ப்பதையே கடமையாக வைத்திருக்க வேண்டும்.” என அவர் கூறினார்.