உத்தரபிரதேச மாநிலத்தில் புதிதாக பதவி ஏற்றுக்கொண்ட அமைச்சர்களுக்கு பெண் உதவியாளர்களை நியமிக்க முடிவு செய்த முதல்வர் யோகி ஆதித்யநாத் அந்த முடிவை திரும்பப் பெற்றார். பெண் ஊழியர்களுடன் வேலை பார்ப்பதில் சில நடைமுறை சிக்கல்கள் உள்ளதாகவும், தங்களுக்கு ஆண் உதவியாளர்களைதான் நியமிக்க வேண்டும் எனவும் சில மூத்த அமைச்சர்கள் கேட்டுக் கொண்டனர்.
இதேபோன்று பயணம், நீண்ட நேர பணி, அமைச்சர்களுடன் வெளியூர் பயணம் செல்வது ஆகிய பிரச்சனைகளை சுட்டிக்காட்டி பெண் ஊழியர்கள் சிலரும் அமைச்சர்களுக்கு உதவியாளர்களாக இருப்பதற்கு தயக்கம் காட்டினர். அதனை தொடர்ந்து அமைச்சர்களுக்கு ஆண் உதவியாளர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.