தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 26ஆம் தேதி நடத்தப்பட்டு மே இரண்டாம் தேதி வாக்குப் பதிவுகள் எண்ணப்பட்டது. இதில் திமுக பெரும்பான்மையுடன் வெற்றியை கைப்பற்றியது. ஆனால் அதிமுக தோல்வி அடைந்தது. இதையடுத்து தமிழக முதல்வராக மு.க ஸ்டாலின் பதவியேற்றார். மேலும் ஒவ்வொரு துறைக்கும் ஒவ்வொரு அமைச்சர்களும் நியமிக்கப்பட்டனர்.
இந்நிலையில் அமைச்சர்கள் தங்கள் துறையில் தவறு செய்தால் பதவியில் இருந்து நீக்கப்படுவார்கள் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி எச்சரிக்கை விடுத்துள்ளார். கட்சி பிரச்சினைகளுக்காகவோ, மற்ற பிரச்சினைகளுக்காகவோ காவல்துறைக்கு யாரும் போன் செய்யவோ, நேரில் செல்லவோ கூடாது. அமைச்சர்களின் பிஏக்கள் நியமனத்தில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும்.