தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதையடுத்து அரசியலில் கட்சிகள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். ஒவ்வொரு கட்சியிலும் கூட்டணி குறித்த குழப்பமும், தொகுதி பங்கிடுவதில் இழுபறியும் நீடித்து வருகிறது. இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. மேலும் அரசியல் கட்சியினர் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டதுடன் வேட்புமனுவையும் தாக்கல் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் அமைச்சர் எம்.சி சம்பத்தின் அசையும் சொத்து ரூ.3.57 கோடி, அசையா சொத்தின் மதிப்பு ரூ 9.17 கோடி என்று தகவல் வெளியாகி உள்ளது. கடலூரில் போட்டியிடும் எம்.சி சம்பத் தாக்கல் செய்த வேட்புமனுவில் சொத்து விபரம் பற்றி தகவல் வெளியாகியுள்ளது.