Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மனு தள்ளுபடி..!

அறப்போர் இயக்கம் மீது அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கிற்கு கண்டனம் தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம் அவரது மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கு குறித்து எதிர்மறை பரப்புரை செய்யக் கூடாது என்ற நீதிமன்ற உத்தரவிட்டிருந்தது. நீதிமன்ற உத்தரவை மீறி அறப்போர் இயக்கத்தினர் சமூக வலைதளங்களில் தொடர்ந்து அவதூறு பரப்புவதாக அமைச்சர் வழக்கு தொடர்ந்தார்.

அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அரசியல் உள்நோக்கத்துடன் அறப்போர் இயக்கத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளதாக நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.. மேலும்  அமைச்சர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து பேச நீதிமன்றம் எந்த தடையும் விதித்திருக்கவில்லை என நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |