தமிழகத்தில் மின்சார துறை அமைச்சராக செந்தில் பாலாஜி இருக்கிறார். இவர் மீதான பண மோசடி வழக்கு மீண்டும் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இது குறித்து பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் கடந்த 2019-ஆம் ஆண்டு செந்தில் பாலாஜி மீது முதல்வர் ஸ்டாலின் சுமத்திய குற்றச்சாட்டுகளை உச்சநீதிமன்றத்தின் சமீபத்திய தீர்ப்பு உறுதி செய்துள்ளது. இன்றைய முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு தெரியவில்லையா? புரியவில்லையா? தெரிந்திருந்தால் புரிந்து இருந்தால் இந்நேரம் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கி இருப்பாரே? என்று பதிவிட்டுள்ளார். இந்நிலையில் செந்தில் பாலாஜி அதிமுக கட்சியில் இருக்கும் போது அவருடைய ஊழல் குற்றச்சாட்டுகளை முதலமைச்சர் ஸ்டாலின் வெளிப்படையாக கூறினார்.
இதனையடுத்து தற்போது செந்தில் பாலாஜி திமுக கட்சியில் இணைந்ததால் அவருடைய குற்றச்சாட்டுகளை தமிழக முதல்வர் மூடி மறைக்கிறாரா என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது. கடந்த 2011-2016 ஆம் ஆண்டில் அதிமுக ஆட்சியின்போது செந்தில் பாலாஜி போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார். அந்த சமயத்தில் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பணி நியமனத்தில் செந்தில் பாலாஜி பணம் வாங்கிக் கொண்டு மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால் பணம் கொடுத்தவர்களுடன் சமரசம் ஏற்பட்டதால் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவர்கள் உதவியாளர்களின் மீது இருந்த வழக்கை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பணத்தைப் பெற்றவர்கள் வழக்கை வாபஸ் வாங்கி விட்டால் வழக்கு செல்லாது என்று ஆகிவிடுமா? என்று கேள்வி எழுப்பினர். அதன் பின் வேலைக்காக பணம் வாங்குவதும் கொடுப்பதும் குற்றம். எனவே செந்தில் பாலாஜி மீதான வழக்கை ரத்து செய்த உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு செல்லாது. சமரசமாக செல்வதன் காரணமாக குற்ற வழக்குகளை விசாரிக்காமல் இருக்க முடியாது. இந்த வழக்கை தமிழக அரசு முதலில் இருந்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் அமைச்சர் செந்தில் பாலாஜியின் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருடைய பதவி பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து 2019ல் அன்றைய எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் அவர்கள் சுமத்திய குற்றச்சாட்டுகளை உச்சநீதி மன்றத்தின் சமீபத்திய தீர்ப்பு உறுதி செய்துள்ளது இன்றைய முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு தெரியவில்லையா?
புரியவில்லையா?(1/2)— Narayanan Thirupathy (@narayanantbjp) September 11, 2022