மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 2020 ஆம் ஆண்டு திமுக சார்பில் மாநில முழுவதும் போராட்டம் நடத்தப்பட்டது. அப்போது உண்ணாவிரத போராட்டத்தில் கொரோனா விதிகளை மீறிய செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில் ஜனநாயக முறைப்படி போராட்டம் நடத்தப்பட்டதாகவும் விதிமுறைகளை மீறவில்லை எனவும் மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது.