Categories
மாநில செய்திகள்

அமைச்சர் செந்தில் பாலாஜி மீது மோசடி வழக்கு…. நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!

அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான மோசடி வழக்கின் தீர்ப்பு திங்கட்கிழமை அளிக்கப்படுகிறது.

தற்போது மின்சார துறை அமைச்சராக இருக்கக்கூடிய செந்தில் பாலாஜி கடந்த 2015- ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார். அப்போது பலரிடம் வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்தனர். இந்நிலையில் அமைச்சர் மற்றும் அவரது நண்பர்கள்  உள்ளிட்ட பலர்  மீது நம்பிக்கை மோசடி, கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு சென்னையில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என கூறி அமைச்சர் செந்தில் பாலாஜி மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது  அமைச்சர் தரப்பில் அரசியல் பலி வாங்கும் நடவடிக்கை காரணமாக இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், எனவே அவற்றை ரத்து செய்ய வேண்டும் எனவும் கூறப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அமலாக்கத்துறை தமிழக அரசியல் அதிகாரமிக்க நபராக அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளதாகவும், அவர் மீதான குற்றசாட்டை அடிப்படையாகக் கொண்டுதான் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அவற்றை ரத்து செய்யக்கூடாது என திட்டவட்டமாக கூறினர். இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள். ஏழ்மையான மக்கள் பணம் கொடுத்து ஏமாந்துள்ளனர். எனவே மீண்டும் புதிதாக விசாரணை நடத்த வேண்டும் வழக்கை ரத்து செய்யக்கூடாது என கூறினர்.  இது குறித்து காவல்துறையினர் தரப்பில் கூறியதாவது. அமைச்சர் மீதான புகார் குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி இந்த மனு மீது வருகின்ற திங்கட்கிழமை தீர்ப்பளிப்பதாக கூறியுள்ளார்.

Categories

Tech |