சிவகங்கை மாவட்டம் அதிமுக சார்பில் சிவகங்கை நகர் அரண்மனை வாயில் முன்பாக அதிமுகவின் 51 ஆம் வருட துவக்க பொன்விழா பொதுக்கூட்டம் நிகழ்ச்சி கட்சியின் மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான செந்தில்நாதன் தலைமையில் நடைபெற்று உள்ளது. இந்த விழாவில் அதிமுக முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் பேசியுள்ளார். அப்போது அதிமுகவில் இருந்து சென்ற ராஜகண்ணப்பன் தொடர்ந்து கப்பம் கட்டி வருவதனால் பதவியில் நீடித்து வருகிறார். ஆனால் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது நீதிமன்ற வழக்கு நீடித்து வருவதனால் அவர் அமைச்சராக தொடர்ந்து நீட்டிக்க முடியாது என அமைச்சர் பாஸ்கரன் பேசியுள்ளார்.
இதனை தொடர்ந்து போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்ததாக தன்மீது பதியப்பட்டு இருக்கின்ற வழக்கிலிருந்து விடுவிக்க கோரி அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் சில நாட்களுக்கு முன் உத்தரவிட்டிருக்கிறது. இந்த சூழலில் அதிமுக முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் செந்தில் பாலாஜியின் அமைச்சர் பதவி பற்றி இவ்வாறு கூறியிருப்பது குறிப்பிடத்தக்கதாகும். முன்னதாக இந்த விழாவில் பேசிய அதிமுக எம்எல்ஏ செந்தில்நாதன் திமுக தலைவர் மு க ஸ்டாலின் முதலமைச்சர் பொறுப்பில் இருந்து தகுதி இல்லாத நபராக இருக்கின்றார். மேலும் தமிழ்நாட்டின் காவல் துறையும் அவர் கட்டுப்பாட்டில் இல்லை அவரால் நியமிக்கப்பட்ட அமைச்சர்களும் அவர்களின் கட்டுப்பாட்டில் இல்லை என பேசி உள்ளார்.